இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தகவல்!
Wednesday, October 18th, 2023
இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று (17) பாராளுமன்றத்தில் கையளிக்க திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
ஆய்வு அறிக்கை எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நாட்டின் நகரமயமாக்கலைப் பொறுத்தவரை, கடைசியாக 2012 இல் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதன்படி, நாட்டின் நகரமயமாக்கல் 18.2% ஆக பதிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தொற்று தொடர்பில் யாழ் மாவட்டம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொடர்ந்தும் அபாயம் உள்ளது – மாவட்ட...
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சம் வரை அபராதம் ...
ஆண்டு இறுதிக்குள் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு - அரச சேவையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாது என பொதுநிர்வ...
|
|
|


