இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது – தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவிப்பு!

Friday, October 13th, 2023

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் ஒவ்வொரு மாநாட்டிலும் இலங்கை இராணுவம், போர்க்குற்றம் இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

அதற்கு பதிலளிக்கவும், யுத்தத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் நோக்கிலும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. நாட்டு மக்கள், அச்சமோ சந்தேகமோ இன்றி வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும்.

அத்துடன், நாட்டுக்கான முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமாக அமைவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: