இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்பு – தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிப்பு!

Wednesday, August 25th, 2021

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 190  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 446 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 767 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 44 ஆயிரத்து 474 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் லும் 9  பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் உயிரிழந்தோரின் அதிக எணணிக்கை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

அத்துடன், வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 209ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: