ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக பாரிய வேலைத்திட்டம்  – அரசாங்கம்!

Monday, December 11th, 2017

நிதி மோசடியை ஒழிப்பதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்ச்ர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் பாரிய வேலைத்திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.நிதி மோசடியை ஒழிப்பதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவின் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 13 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக 93 பிரச்சினைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகள்; சிக்கல் வாய்ந்தவையாகும். சில கொடுக்கல் வாங்கல்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றுள்ளன.அவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து ஆராய்வதற்காக அந்த நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. உள்நாட்டு விசாரணைக் குழுக்களுக்கு விசேட அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. விசாரணை நடவடிக்கைகளுக்கு மனித வளங்களும் குறைவாக உள்ளன.

எனினும், அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு இந்த விசாரணைகளில் முன்னெற்றம் காணப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: