இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று பகல் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 106 இலிருந்து 110 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண குணமடைந்துள்ளனர். குணமடைந்த இருவரும் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
ஏனைய 100 நோயாளர்களும் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 89 பேர் அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலும், 10 பேர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையிலும், ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 199 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.
Related posts:
|
|