இலங்கையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 824 ஆக உயர்வு – கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில் தவறு என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Friday, May 8th, 2020

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 20 பேர் நேற்று நள்ளிரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 824ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மட்டும் 27 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை 232 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 583 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில் 13 பரிசோதனைகள் பிழையானவை என இலங்கை மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்று பரவியதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட சிலருக்கு பின்னர் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதுவரையில் சுமார் 13 பிழையான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆய்வுகூட நிபுணர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் சுகாதார அமைச்சின் கீழ் நடத்தப்பட்ட பரிசோதனைகள் எதுவும் இவ்வாறு பிழையான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: