இலங்கையில் குறைந்த ஆற்றல் அலகு விலையை வழங்க இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி நடவடிக்கை !

Sunday, December 24th, 2023

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் காற்றாலை ஆற்றல் திட்டம் இலங்கையில் குறைந்த ஆற்றல் அலகு விலையை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி பாவனையாளர்களுக்கு 30 வீத செலவுக் குறைப்பை வழங்கமுடியும் என்பதுடன் அலகு ஒன்றுக்கான செலவுகளை 0.10 டொலர்களுக்கு கீழே குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது பொதுமக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அளிக்கும் என்று அதானி குழுமத்தகவல்கள் கூறுகின்றன.

காற்றாலை மின்சாரத்திட்டத்தினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு வருடாந்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்கமுடியும்.

எனினும் உயரதிகாரிகளின் எதிர்ப்பு காரணமாகவே இந்த திட்டங்கள் தாதமமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மொத்தம் 25 பில்லியன் டொலர் முதலீடு செய்வதற்கான நோக்கங்களை நிறுவனங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

சன் பவர் என்ற நிறுவனம் 1.5 பில்லியன் டொலர்கள் முதலீட்டுடன் முன்னணியில் உள்ளது, அதானி கிரீன் 900 மில்லியன் டொலர்களையும் ஆர்பிட்டல் எனர்ஜி 200 மில்லியன் டொலர்களையும், WindForce PLC 150 மில்லியன் டொலர்களையும் முதலிடவுள்ளமை குறிப்பிடத்தாக்கது.

Related posts: