இலங்கையில் 3 ஆயிரத்து 843 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர் – பால்வினை நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர்!

Sunday, February 25th, 2018

இலங்கையில் தற்போது வரையில் 3 ஆயிரத்து 843 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாகவும்  சுமார் 4 ஆயிரம்  பேர் வரையில் இலங்கையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் பால்வினை நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகவே பெரும்பாலானவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்தின் பிரதேசங்களிலேயே பெருமளவான எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக 25 தொடக்கம் 45 வயதுப்பராயத்தில் உள்ளவர்களையே எயிட்ஸ் நோய் கூடுதலான அளவில் தாக்கியுள்ளது.

இவர்கள் பாதுகாப்பற்ற பாலுறவுகள் மூலம் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அறிமுகமற்றவர்களுடனான பாலுறவு செயற்பாடுகளின் போது பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாளுவதே எயிட்ஸ் நோயிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான வழி என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts: