ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்!

Thursday, August 18th, 2016

ஐ.நா. பொதுச் சபை கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தற்­கா­க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடுத்த மாதம் அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை விஜ­யம் மேற்­கொள்­ள­வுள்ளார் தெரிவிக்கப்படுகின்றது..

ஐ.நா. பொதுச் சபை கூட்­டத்தின் 71 ஆவது அமர்வு செப்­டெம்பர் 21 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதில் உரை­யாற்­று­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி நியூயோர்க் பய­ண­மா­கிறார். அதே­வேளை அடுத்த வருடம் ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் முடி­வ­டைந்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா பதவியிலிருந்து வெளி­யே­ற­வுள்ள நிலையில் அடுத்த மாதம் இடம்­பெறும் ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் இறு­தி­யாகக் கலந்­து­கொள்­வதும் கடந்த பத்து வரு­டங்­க­ளாக ஐ.நா. பொதுச் செய­லாளர் பதவி வகித்­து­ வரும் பான் கீ முன் இவ்­வ­ருட இறு­தி­யுடன் ஓய்­வு­பெ­ற­வுள்­ள­தாலும் அடுத்த மாதம் இடம்பெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் விசேடமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: