இலங்கையில் கரிம உர மையத்தை உருவாக்க இந்தியா பங்களிக்கும் – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!

இந்தியாவின் முழுமையான ஆதரவோடு இலங்கையில் ஒரு கரிம உர மையத்தை உருவாக்க உறுதியளிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
அத்துடன் கரிம உர விவசாயத்தில் கவனம் செலுத்தவுள்ள இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கைக்கு தேவையான பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், நிபுணத்துவம் மற்றும் சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றில் பங்களிப்பு செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் ஒருங்கிணைந்த உயிர் உர உற்பத்தி திட்டங்களை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உர நிறுவனங்களை உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏப்ரல் முதல் புதிய உள்நாட்டு தீர்வைச் சட்டம் அமுல்!
இலங்கையிலும் ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் - மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் -நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹா...
|
|