இலங்கையில் இலகு தொடருந்து முறை அறிமுகம்!
Tuesday, April 3rd, 2018
தலைநகர் கொழும்பில் இலகு தொடருந்து முறைமையினை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறித்த திட்டத்திற்கு அமைய 2025 ஆம் ஆண்டளவில் இந்த தொடருந்து சேவை ஆரம்பிக்க முடியும் எனவும் இதன்மூலம் சிறந்த போக்குவரத்து சேவையினை மக்களுக்கு வழங்க முடியும்எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு அமைய 7 இலகுரக தொடருந்து பாதைகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து பொரளை, பத்தரமுல்ல, ஊடாக மாலபேக்கு முதலாவது திட்டம் அமைக்கப்படவுள்ளது.
இதற்குரிய அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளதுடன், இந்த பணியை 2 ஜப்பானிய நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன.
Related posts:
ஜனாதிபதி அமெரிக்கா பயணம்!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 1500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது!
இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்க நடவடிக்கை - ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
|
|
|


