இலங்கையில் ஆண்களுக்கு தட்டுப்பாடு – திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக பேராசிரியர் இந்திரலால் டி சில்வா எச்சரிக்கை!
Friday, February 16th, 2024
நாட்டில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் திருமண வீதம் மற்றும் பிறப்பு வீதம் ஆகியன படிப்படியாகக் குறைந்து வருகின்றது. புதிதாகப் பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் குறைந்துள்ளது.
தற்போது நாட்டில் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு தகுதியான ஆண் ஒருவரை தேடுவது கடினம்.
அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் இளைஞர் சனத்தொகையில் கணிசமான குறைவைக் காண முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்கடொலர் நிதியுதவி - IMF
அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை!
யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படுவதில்லை - யாழ் மாவட்ட செயலகம்...
|
|
|


