மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்து புதிய அமைச்சரவை ஆராயும் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்!

Wednesday, August 26th, 2020

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அவர், குறித்த குழு தேசிய நலன்களைப் பற்றி பல கவலைகளை எழுப்பிய நிலையில் அவை குறித்து பதில்களைக் தேட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – “இந்த அறிக்கை புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நான் நினைக்கிறேன். புதிய அமைச்சரவை ஒவ்வொரு அமைச்சினாலும் குறித்த அறிக்கை அவதானிக்கப்படும் ஏன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவை அனைத்தும் முடிந்ததும், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு விடப்படும்” என தெரிவித்தார்.

இதன்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் வளர்ச்சி குறித்து இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்குக்கிடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர், “இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு ஏற்பாடு என்பதால் ஜனாதிபதி அதை மதிக்க உறுதிபூண்டிருந்தார்.

ஜனாதிபதியின் கொள்கை என்னவென்றால், எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு தேசிய சொத்தும் முழு கட்டுப்பாட்டில் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: