இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
Saturday, March 20th, 2021
இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான அனுமதியை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் தற்போதுவரை இந்தியாவின் சீரம் நிறுவன கொரோனா தடுப்பூசி மட்டுமே மக்கள் பாவனையில் உள்ளது.
இந்நிலையில் இன்று அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் யாழ்ப்பாணத்தில் பன்றிக் காய்ச்சல் - மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளயாழ்ப்பாணப் பிர...
போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு சென்றார் ஜனாதிபதி!
நோயாளர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு - அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் அறிவ...
|
|
|


