மீண்டும் யாழ்ப்பாணத்தில் பன்றிக் காய்ச்சல் – மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளயாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு!

Saturday, May 26th, 2018

பன்றிக் காய்ச்சல் எனப்படும் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று மீண்டும் குடாநாட்டில் பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் –

கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் குறித்து மேலதிக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

 ‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகளோடு கடந்த சில வாரங்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் குருதி மாதிரிகள் பெறப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில் நிலவும் மாறுபட்ட காலநிலை மாற்றம் காரணமாக இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளிலும் இந்த நோய் தாக்கம் இனங்காணபட்டது. எனினும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.

Related posts:


யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத்தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி அமைச்சர்களான ஜி.எல்.பீர...
மனித உரிமை மீறப்பட்டிருந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க தயார் - வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்...