தேர்தலை நடத்த தயார் – மகிந்த தேசப்பிரிய!
Thursday, June 2nd, 2016
எந்த சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணைக்குழுவினால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படவில்லை. குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சரினால் எமக்கு உறுதியாக, வழங்கப்படும் வரை தேர்தலை நடத்துவதில் நெருக்கடி நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘உங்கள் பெயர்களை தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியலில் தாமதிக்காது உள்ளீடு செய்யுங்கள்’ என்ற தொனிப்பொருளில் கம்பளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரணி நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.
Related posts:
தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக கடற்றொழிலா...
பலத்த மழைவீழ்ச்சி - பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
|
|
|


