இலங்கையிலும் போக்குவரத்து பல்கலைக்கழகம் – போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை!
Monday, April 3rd, 2023
இலங்கையில் போக்குவரத்து பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, தற்போது இரத்மலானை தொடருந்து பணி வளாகத்தில் இயங்கி வரும் ஜேர்மன் தொடருந்து தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை ரஷ்யா மற்றும் பெலாரஸ் போக்குவரத்து பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இலங்கையில் போக்குவரத்து பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கைதான தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 05 வரை விளக்கமறியல் – கடத்தப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை எ...
நுகர்வோர், கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரை 14.6 பில்லியன் கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளனர் - மின்சார ச...
எரிபொருள் துறையில் புதிய திட்டங்கள் - ஷெல் இன்டர்நெஷனல் நிறுவனம் வரையறுக்கப்பட்ட ஆர்.எம்.பார்க் நிறு...
|
|
|


