இலங்கையிலிருந்து மீண்டும் நேரடி விமான சேவை!யை முன்னெடக்கிறது கல்ஃப் எயார் நிறுவனம்!

Wednesday, February 10th, 2021

பஹ்ரைன் நாட்டின் தேசிய விமான சேவையான கல்ஃப் எயார், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மீண்டும் நேரடி சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் வாராந்தம் இரண்டு விமானங்களை சேவையில் ஈடுபட்டுத்தவுள்ளதாக கல்ஃப் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.

கல்ஃப் எயார் 1981முதல் பஹ்ரைன் மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவைகளை முன்னெடுத்துள்ளது.

அபுதாபி, துபாய், குவைத், ரியாத், ஜித்தா, தமாம், மதீனா, மஸ்கட், கெய்ரோ, அம்மன், காசாபிளாங்கா, லண்டன், பாரிஸ், பிராங்பேர்ட், ஏதென்ஸ், பேங்காக், மணிலா, டாக்கா, உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியங்களுக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல இடங்களுக்கு கல்ஃப் எயார் சேவைகளை முன்னெடுத்து வந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஒருபோதும் பறப்பதை நிறுத்தாத சில விமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய கல்ஃப் எயார், அதன் வலையமைப்பு முழுவதும் உள்ள அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: