இலங்கையின் 76 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில்!
Friday, November 12th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் , நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கும் வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் 76ஆவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் முதலாவது சந்தர்ப்பமாகவும் இது வரலாற்றில் பதிவாகும்.
அத்துடன், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமாகி, 7 நாட்களுக்கு இடம்பெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் ?
இந்து - லங்கா ஒன்றிணைந்த ஆணைக்குழுவை மீண்டும் கூட்டுவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருட்ன அமைச்சர் ப...
மத்திய வங்கியின் சுற்றுநிருபங்களை மீறி செயற்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறித்து முறைப்பாடு வழங...
|
|
|


