இலங்கையின் 69ஆவது சுதந்திர தின விழா இன்று!

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின விழா இன்றாகும் இதனை கோலாகலமாக நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்..
தேசிய ஒற்றுமை என்பதே இம்முறை சுதந்திர தின விழாவின் தொனிப்பொருள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். விழா ஏற்பாடுகள் பற்றி செய்தியாளரகளுக்க விளக்கம் அளிப்பதற்காக நேற்றுசெய்தியாளர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
இம்முறை சுதந்திரத் தின கொண்டாட்டங்களின் பிரதான வைபவம் காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெறும்.
இன்று காலை 9.18க்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும், கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இலங்கை கடற்படையினால் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்படும்.
சுதந்திர தின பிரதான வைபவம் காலை 8.00 மணிக்கு காலிமுகத்திடலில் ஆரம்பமாகும். மாவட்ட மட்டத்தில் 23 வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில்உள்ள இலங்கைத் தூதரகங்களும் சுதந்திர தின விழாக்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|