இலங்கையின் மறுசீரமைப்புக்காக யு.எஸ்.எயிட் அமைப்பு நிதி உதவி!

நாட்டின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரான யு.எஸ்.எயிட் அமைப்பு 1.6 பில்லியன் இலங்கை ரூபாவினை மேலதிக மானியமாக வழங்கியுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூகோள சமுக அமைப்புகள் இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் உள்ளூர் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன், 3 வருடங்களுக்கான வேலைத்திட்டத்துக்கு அமெரிக்க யு.எஸ்.எயிட் பங்களிப்பு செய்யவுள்ளது.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நிலவுகின்ற சவால்களை அடையாளம் கண்டு தீர்ப்பதற்காக இந்த வேலைத்திட்டம் அமுலாக்கப்படுகிறது.
Related posts:
குண்டுவெடிப்பின் எதிரொலி: இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்!
25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இறுக்கமான பயணக்கப்பட்டுப்பாடு – விவசாயம் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்ன...
நம்பிக்கையுடன் பயணித்தால் சாதனைகள் பலவற்றை எட்ட முடியும் – வேலணையில் ஈ.பி.டி.பியின் மாவட்ட நிர்வாக ப...
|
|