நம்பிக்கையுடன் பயணித்தால் சாதனைகள் பலவற்றை எட்ட முடியும் – வேலணையில் ஈ.பி.டி.பியின் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் தெரிவிப்பு!

Saturday, January 8th, 2022

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சித்து வருகின்றார் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னணன் நம்பிக்கையுடன் பயணித்தால் சாதனைகள் பலவற்றை எட்ட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் பிரதேச நிர்வாக பொறுப்பாளர் சின்னையா சிவராசா தலைமையில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரது முன்னிலையில் இடம்பெற்றது.

இதில் சமகால அரசியல் தொடர்பாக கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கடந்த காலத்தில் கற்றுக்கொண்டதை பாடமாக கொண்டு இனிவரும் காலத்தை சிறந்த ஆரோக்கியமானதாக உருவாக்க நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கடந்த காலத்திலும் சரி இனிவருங் காலத்திலும் சரி எமது கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அல்லது சாதித்துக்காட்டப்பட்ட சேவைகள் ஏராளம். ஆனால் அவை ஒவ்வொன்றும் மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவும் மக்கள் மனங்களை சென்றடைந்ததாகவும் மாற்றப்படவில்லை என்பதே வேதனையாக உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மக்களுடன் வாழ்ந்து அவர்களது பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை காண பிரதேச சபையின் உறுப்பினர்கள் முயற்சித்தல் அதை எதிர்கட்சிகள் குழப்பும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர்.

இதேநேரம் மக்களுக்கு நாம் சேவையாற்ற வேண்டுமானால் அதிகாரம் அவசியம். அதுமட்டுமல்லாது அந்த அதிகாரமும் முழுமையாக இருப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனிடையே அன்று நாம் 13 ஐ வலியுறுத்தியபோது அதை நிராகரித்தும் எதிர்த்தும் வந்த தரப்பினர் இன்று அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறி பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதுவதிலும் யோசனை அறிக்கை அனுப்புவதிலும் ஓடித்திரிகின்றனர்.

இதை எமது கட்டசியின் செயலாளர் நாயகம் அன்று வலியுறுத்தியிருந்தபோது ஏற்றிருந்தால் இன்று இவ்வாறு அந்த 13 ஐ பாதுகாத்து தாருங்கள் என கூறி ஓடித்திரியவேண்டிய நிலை உருவாகியிராது.

மத்திய அரசுடன் இணைந்து செயற்பட்டபோதெல்லாம் அதையும் கொச்சைப்படுத்தியும் சேறடிப்புக்களை செய்வதிலும் இருந்தவர்கள் இன்று அதை தாமும் முன்னெடுத்ப்பதற்காக கதைகளை கூறுகின்றனர்.

அந்தவகையில் கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுவதை கைவிட்டு உண்மையானவர்களாக மக்கள் மத்தியில் தமது மகங்களை காட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே பிரதேசத்தில் நடைபெற வேண்டிய அபிவிருத்தி தேவைப்பாடு அரசியல் ரீதியாக மக்கள் மனங்களை வெல்லும் ஆலோசனைகள் பிரதேச சபை உறுப்பினர்களின் அதிக பங்களிப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டதுடன் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய ஆலோசனை சபையின்  நிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டது.

இதன்போது குறித்த பிரதே சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி மற்றும் பிரதேச நிர்வாக பொறுப்பாளர் சின்னையா சிவராசா ஆகியோரும் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: