இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024

இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தித்தில் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளியோம் என்றும் சூளுரைத்துள்ளார்.

இலங்கைக் கடற்படையின் விசேட கப்பல் படையணிக்கு ‘ஜனாதிபதி வர்ணங்கள்’ வழங்கும் நிகழ்விலேயே  ஜனாதிபதி இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இதன்போது, 1967 இஸ்ரேல் – அரபு யுத்தத்தின் போது சுயஸ் கால்வாய் மூடப்பட்டதன் காரணமாக 10 வருடங்களாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் தடைப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்நாட்டு துறைமுகங்களின் பெறுமதியை பேணுவதற்காக சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

இறுதி யுத்தத்தின் போது இலங்கை கடற்படையினர் நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றியது.  உயிர்த் தியாகம் செய்தவர்கள் மற்றும் இழக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான குறிப்புக்கள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: