பரீட்சையில் மோசடி சி.ஐ.டி. விசாரணை!

Wednesday, December 20th, 2017

நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி விடையளித்த மாணவர்களின் விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது;

இம்முறை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை வினாத்தாளுக்கு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி விடை எழுத முற்பட்ட கொழும்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கணித பாட பரீட்சையின் போதே கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களத்திற்கு பரீட்சை மண்டபபொறுப்பதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவர் தனது வைபர் வலைத்தளம் மூலம் வினாப் பத்திரத்தை புகைப்படம் எடுத்து அதனை யுவதி ஒருவருக்கு அனுப்பி விடைகளைப் பெறமுற்பட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி விடை எழுத முற்பட்ட மற்றைய மாணவர் நாரஹேன்பிட பகுதியிலுள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சை எழுத வந்த ஒருவராகும்.

இதனால் இருவரது பரீட்சை நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க, பரீட்சைகள் திணைக்களத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ் இரு மாணவர்களும் இரண்டாவது முறையாக சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளதோடு நாரஹேன்பிட மாணவர் கணிதப் பாடத்தை மட்டுமே தெரிவு செய்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: