இலங்கையின் ஏற்றுமதிகளை சடுதியாக குறைத்த சீனா!

Sunday, May 7th, 2023

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை இலங்கையில் இருந்து சீனாவின் இறக்குமதிகள் 93.74 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்து என தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் மின்சாரப்பொருட்களும் அடங்குகின்றன.

சீனாவுடனான இந்த ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளாக நிலவுகின்ற போதும் இன்னும் அது நிவர்த்திக்கப்படவில்லை.

அதேநேரம் சீனாவின் இந்த வர்த்தக உறவுடன் ஒப்பிடும் போது, அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு வர்த்தக பங்காளியாக உள்ளது.

2020-2021 ஆம் ஆண்டில், சீனாவின் ஏற்றுமதி சந்தையில் இலங்கையின் பங்கு வெறும் 2.19 வீதமாக இருந்தது, எனினும் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 24.5 வீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: