இலங்கையர்கள் அனைவருக்கும் புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை – பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவிப்பு!
Sunday, March 14th, 2021
இலங்கையர்கள் அனைவருக்கும் புதிதாக பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனப்படையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதிமுதல் இந்த பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அதில் ஒவ்வொரு நபருடைய பிறப்புமுதல் இறப்பு வரையான தகவல்கள் அடங்கிய தரவுகள் கணினிமயமாக்கப்படும் எனவும் பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பதிவாளர் நாயகம் வீரசேகர தற்போது உள்ள பிறப்பு சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டு புதிய தேசிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இன்று பொறுப்பேற்பு!
நாட்டின் கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு - அமைச்சர் மஹிந்த அமரவீர!
அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல - ரமேஷ் பத்திரனவிற்கு கைத்தொழ...
|
|
|
நிதி கிடைக்கும் வரை அதிவேக நெடுஞ்சாலைகள், ஏனைய வீதிகளின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தம் - வீதி அபி...
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ள சீன மக்களும் சீன அரசாங்கமும் துணை நிற்கும் - இலங்கைக்கான ச...
சஜித்தின் கட்டுப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இல்லை - 02 மர்ம நபர்களின் கீழேயே இருக்கிறது - உள்ளதாக ...


