இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா வழங்கலை மீண்டும் ஆரம்பித்தது இந்தியா!
Monday, November 15th, 2021
இலங்கை பயணிகளுக்கான வழமையான சுற்றுலா விசாக்கள் வழங்கும் செயற்பாடுகளை இன்றுமுதல் இந்தியா ஆரம்பித்துள்ளது.
இந்த தகவலை கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிபடுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘இந்தியா அழைக்கிறது!! இலங்கை பயணிகளுக்கான வழமையான சுற்றுலா விசாக்கள் இன்று முதல் வழங்கப்படும். வருகைதந்து இந்தியாவின் அழகையும் பன்முகத்தன்மையையும் ரசித்து மகிழுங்கள்’ என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உரிமைகளை வலியுறுத்தி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
சூரிய சக்தி மின் பிறப்பாக்கத்திற்கான ஒழுங்கு விதிகள் - பொதுமக்கள் ஆலோசனை!
உடைமையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகத்தில் இளைஞன் கைது!
|
|
|


