சூரிய சக்தி மின் பிறப்பாக்கத்திற்கான ஒழுங்கு விதிகள் – பொதுமக்கள் ஆலோசனை!

Saturday, September 30th, 2017

கட்டடக்கூரைகளின் மேல் சூரிய சக்தி மூலமான மின் பிறப்பாக்க அபிவிருத்தி மீதான பொதுமக்கள் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரைகளின் மேல் சூரியப் படல்களை வைத்து மின் பிறப்பாக்கம் நடைபெறுவதை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாங்கக் கொள்கைக்கு இந்த ஆலோசனை பெறுகையானது உதவி செய்யும்.அடுத்த பத்து ஆண்டுகளில் இவ்வாறான சூரிய மின் பிறப்பாக்கங்கள் ஒரு மில்லியன் அளவில் செயற்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம் இலக்கு வைத்துச் செயற்படுகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டம் 2020ம் ஆண்டில் 200ஆறு கொள்ளளவினை அடைய இலக்கிட்டுள்ளதோடுஇ 2025ம் ஆண்டில் அதனை 1000ஆறுக்கு அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

2017ம் ஆண்டு ஓகஸ்ட் வரை, கூரைகள் மேல் உள்ள சூரியப்படல்கள் மூலம் பிறப்பாக்கக்கூடிய மொத்த மின் கொள்ளளவு 74 ஆறு எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஓராண்டுக்கு முன்னர் அது 28 ஆறு ஆக இருந்தது. ‘சூரியபல சங்க்ராமய’ நிகழ்ச்சித்திட்ட ஆரம்பத்தின் பின் கொள்ளளவில் 46ஆறு உள்ளிடப்பட்டது.

பின்வரும் விடயப்பரப்புகளில் தங்கள் கருத்துகளை பரிந்துரைகளை அளிக்குமாறும் பொதுமக்களையும் பங்காளர்களையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோருகின்றது.

  1. ஏற்கனவேயுள்ள சட்டகவுருக்களை மேம்படுத்தும் பரிந்துரைகள் (உ10ம்: நெட்-மீட்டரிங் விண்ணப்பச் செயன்முறை நெட்-மீட்டர் பொருத்துகைக்கான மதிப்பு செலவு இன்னபிற.)
  2. சூரிய படல் பொருத்துகைக்கு நிதியளிப்பு செலவு மீளளிப்பு மற்றும் நாடு ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் சூரிய படல் பொருத்துகையின் நன்மைகள் பற்றிய கருத்துகள்
  3. பொருத்துகையின் நியமம் வேலைத்திறன் மற்றும் சிறந்த பயிற்சிகள்
  4. தொழினுட்பக் கட்டுப்பாடுகள் மற்றும் மின்கட்டமைப்புத் தொடர்புக்கான வாய்ப்புகள்
  5. ‘சூரியபல சங்க்ராமய’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இலக்குகளை அடைவதை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆலோசனைகள் மற்றும் கருத்துகள்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் (www.pucsl.gov.lk) இந்த ஆலோசனையளிப்பு ஆவணம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் அச்சிட்ட பிரதியானது ஆணைக்குழுவின் தகவல்மையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 24-10-2017 அன்றோ அல்லது அதற்கு முன்னமோ இவ்விடயம் சார் கருத்துகளை எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் அல்லது (011) 2392641 எனும் தொலைநகல் இலக்கம் மூலம் அல்லது ‘ தலைவர்இ இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 6 – வது மாடி இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம் 28 புனித மைக்கல் வீதி கொழும்பு 03.’ எனும் முகவரிக்கு அஞ்சல் வழி மூலம் அனுப்பிவைக்கலாம்.ஆணைக்குழுவால் திட்டமிடப்படும் வாய்மொழி மூலமான கருத்து சமர்ப்பிப்பு நிகழ்வு பற்றிய தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக பின்னர் அறியத்தரப்படும்

Related posts: