இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டில் ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்ப்பு!
Saturday, June 22nd, 2024
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் முதல் 19 நாள்களில் 69ஆயிரத்து 825 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9 இலட்சத்து 66 ஆயிரத்து 825 சுற்றுலாப்பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ் பல்கலை மாணவர் மோதல்: ஜனாதிபதி கவலை!
கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் செய்தி!
11 ஆவது இடத்தில் இலங்கை - கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர்!
|
|
|


