யாழ் பல்கலை மாணவர் மோதல்: ஜனாதிபதி கவலை!

Tuesday, July 19th, 2016

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் – சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மன் அரசின் நிதி உதவியுடன் கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயற்சி நிலைய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து கவலை வெளியிட்டார்.

நாளைய தலைவர்களாகிய இளைஞர்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டி இருக்கின்றது. பல்கலைக்கழகங்களையும், தொழிற் பயற்சிக் கல்லூரிகளையும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குகின்ற மையங்களாகச் செற்படுத்த வேண்டும் என்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுவது இலகு. ஆனால், அதனை நடைமுறைபடுத்துவது என்பது சவால் மிக்க செயற்பாடாகும். இருப்பினும் அதனைச் செயற்படுத்தாமல் விட முடியாது என்றார் அவர்.

Related posts: