இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு சுகாதார பரிசோதனை!
Thursday, April 26th, 2018
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்கதெரிவித்துள்ளார்.
மலேரியா அற்ற இலங்கை என்ற தொனிப்பொருள் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.இந்த திட்டத்தை international organization for migration என்ற அமைப்புடன் இணைந்து முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதன்மூலமாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் தேகஆரோக்கியம் குறித்து பரிசோதனை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களை நாம்திருப்பியனுப்புவதற்கு எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
ஒரு டொலருக்கு கீழ் சென்ற கச்சா எண்ணெயின் விலை!
எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படுகினறது நடமாட்டத் தடை - மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் ந...
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் தொகையும் 70 ஆயிரத்தை நெருங்கியது – பொலிஸ் ஊடகப் பிரிவ...
|
|
|


