இலங்கைக்கு புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் – கொரிய பிரதமர் ஹான் டக் சூ உறுதியளிப்பு!

Friday, April 5th, 2024

இலங்கைக்கு பல புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் என கொரிய பிரதமர் ஹான் டக் சூ தெரிவித்துள்ளார்.

கொரியப் பிரதமர் ஹான் டக் சூவுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (04) சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக விவசாயம், நிர்மாணத்துறை மற்றும் வேறு கைத்தொழில் துறைகளில் தனது நாட்டில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டிருக்கும் தொழிற்படைக்கு மேலதிகமாக, சுகாதார சேவைகள் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என கொரிய பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கடந்த கால நிதி நெருக்கடியின் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள இலங்கைக்கு, தமது நாடு எப்போதும் துணை நிற்கும் என கொரிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவை, கடற்றொழில் மற்றும் கூட்டு முதலீடு ஆகிய துறைகளில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கான காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கொரிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: