மாநகர சபையின் விசேட அறிவித்தல்!

Friday, October 28th, 2016
நாடளவிய ரீதியில் உள்ள 23 மாநகர சபையின் பரிபாலனத்திற்குட்பட்ட பகுதியில் மாநகர திண்மக்கழிவகற்றல் தொடர்பான முக்கிய முன்னெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அம்முன்னெடுப்பில் மாநகரசபை எல்லைக்குள் அனைத்து திண்மக் கழிவுகளையும் சிறப்பாக முகாமைத்துவம் செய்யும் நோக்குடனும் அதன்மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்தி எமக்கும் இனிவரும் தலைமுறையினருக்கும் சிறந்த ஒரு சுகாதாரமான வாழ்வை ஏற்படுத்தவும் நாம் எல்லோரும் இணைந்து முயற்சி ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறோம். அதற்கு அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வீடுகள், கடைகள், தேநீர்ச் சாலைகள், உணவு விடுதிகள், ஆலயங்கள், பாடசாலைகள், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வைத்தியசாலைகள, தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்களில் சேரும் திண்மக்கழிவுகளைத் தரம் பிரித்து பிளாஸ்டிக், பொலித்தீன், காட்போர்ட், கண்ணாடி, பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்கள் இவை அனைத்தையும் வேறாகவும் உக்கக்கூடிய கழிவுகள் வேறாகவும் யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் வானம் சேகரிக்க வரும் பொழுது அவற்றைத் தந்துதவுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம். அவ்வாறு தாங்கள் தரும் பட்சத்தில் அதனைக் கொண்டு தாங்கள் ஒரு சிறந்த மாநகர திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்குச் சிறப்பாகப் பற்களிப்புச் செய்யமுடியும். அவ்வாறு செய்வதன் மூலம் தாங்களும் நாங்களும் இனி வரும் தலைமுறையினருக்கு சிறந்த ஒரு சுகாதாரமான வாழ்வை வழங்க முடியும் என்பதனை தங்களுக்கு அறியத்தருகின்றோம். இந்த நடைமுறைகள் யாவும் கார்த்திகை மாதம் 1ஆம் திகதியிலிருந்து மிக முக்கியமாகவும் இறுக்கமாகவும் பின்பற்றப்படும் என்பதோடு தரம் பிரிக்கப்படாத திண்மக்கழிவுகள் மாநகர சபையினால் சேகரிக்கப்படாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம் என யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார்.

jaffna_minicipal_council

Related posts: