இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் இணையம் மூலமான முதலாவது சந்திப்பில் பார்வையாளராக கலந்து கொண்டது சீனா!

Wednesday, May 10th, 2023

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் முதலாவது இணையம் மூலமான சந்திப்பில் சீனா பார்வையாளராக கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசன்னம், உலகெங்கிலும் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கடன் துயரங்களைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் பீய்ஜிங், தொடர்ந்தும் ஈடுபடும் என்று கொள்கை வகுப்பாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இலங்கைக்கு கடன் வழங்குனர்களால், கடந்த ஏப்ரல் மாதம் வோஷிங்டன் ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்டமைப்பிற்குள் இன்றைய இணையக் கூட்டம் நடைபெற்றது. ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸுடன் இணைந்து இந்த கூட்டத்தை நடத்தியது.

இந்தநிலையில் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஜப்பானின் உயர்மட்ட நிதி இராஜதந்திரியான மசாடோ காண்டா (Masato Kanda) சீனா ஒரு பார்வையாளராக கலந்துகொண்டது.

எதிர்கால கூட்டங்களில் முழு உறுப்பினராக பங்கேற்கும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து அவர் எதனையும் கூறவில்லை.

கடந்த மாதம், பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை வெளியிட்டன.

இலங்கை இருதரப்புக் கடனாளிகளுக்கு 7.1 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது, அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: