இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வாழ்த்து!

Tuesday, October 18th, 2016

இலங்கை மக்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கௌரவிக்கும் வகையில் GSP பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால் டஸ்க் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியத்தில் பிரெசில்ஸ் நகரில் விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையிலான தூதுக்குழுவினர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் ஒன்றியத்தின் தலைவர் டொனால் டஸ்க்சை சந்தித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு ஆக்ககூடிய ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்த்துள்ள சந்தர்ப்பத்தில் சட்டவிரோதமான ரீதியில் இலங்கையர்கள் ஐரோப்பாவுக்குள் வருகை தருவது தொடர்பில் கூடுதான கவனம் செலுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்பொழுது சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பிரச்சனைபெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன் போது தெரிவித்தார்.

இது தொடர்பில் செயலணி ஒன்று அமைக்கப்படும் என்றும் இதில் சட்டம் மற்றும் சமாதானம் மீள்குடியேற்ற அமைச்சு குடிவரவு குடிஅகல்வு போன்று ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்பும் ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது ஒன்றியத்தின் தலைவர் டொனால் டஸ்க் இலங்கை மக்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் காட்டும் விசேட மரியாதையாக GSP பிளஸ் நிவாரணத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதன் தேவை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல பொதுத்தேர்தலின் போது வலியுறுத்தியதையும் டக்ஸ் இதன்போது குறிப்பிட்டார். இவ்வாறான இணக்கப்பாட்டு நிர்வாகத்தின் முன்னெடுத்து பிராந்திய நாடுகள் மத்தியில் எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையின் கீழ் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேர்மையான ரீதியல் இலட்சிய அர்ப்பணிப்பை முன்னெடுத்தததை தான் மீண்டும் மீண்டும் பாராட்டுவதாக தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் இது தமது முழு ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தாகும் என்று ஒன்றியத்தின் தலைவர் டக்ஸ் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தற்பொழுது அடைந்துள்ள அரசியல் சமூக மறுசீரமைப்புக்கு மத்தியில்  GSP பிளஸ் நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கான தகுதியை பெற்றிறிருப்பதாகவும் அவர் கூறினார்.  GSP பிளஸ் நிவாரணம் உள்ளிட்ட இலங்கையின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்புக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன் போது நன்றி தெரிவித்தார்.

இலங்கை மக்களினது நலன் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி ஜனநாயக செயற்பாடுகளை நேரில் கண்டுகொள்வதற்காக இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருக்கு அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தவர் என்ற ரீதியில் மாத்திரமன்றி தாம் நேசிக்கும் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சார்பில் முன்வைத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அடுத்தவருடத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரச தலைவர் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருடன் நடத்திய முதலாவது பேச்சுவார்த்தை இது என்பது விசேட அம்சமாகும். பிரதம பணியாளர் சபையின் தலைமை அதிகாரி சட்டம் மற்றும் சமாதானம் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்  சாகல ரத்னாயக்க பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பெல்ஜியத்திலுள்ள இலங்கைக்கான தூதுவர் றொட்னி பெரேராவும் இதில் கலந்துகொண்டனர்.

a8fa99fe229aac926fd9b7978b5aab77_L

Related posts: