இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்பு!
Friday, February 11th, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக பிரதி இராஜாங்கச் செயலாளர் வெண்டி ஆர். ஷெர்மன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தூதுவர் சுங்கின் தலைமைத்துவம் அமெரிக்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், அமெரிக்க – இலங்கை கூட்டுறவை முன்னேற்றுவதற்கும் அவரை சரியான தேர்வாக ஆக்கியுள்ளது.
எங்கள் பணியை ஒன்றாகத் தொடர காத்திருக்கிறேன் என பிரதி இராஜாங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மலேரியாவை முற்றாக ஒழித்துள்ள நாடு இலங்கை!
சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க ஐக்கிய ந...
துறைமுக நகர சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் –. கடல்சார் பொருளாதாரத்தை உருவாக்குவதே நோக்கம் - ஜனா...
|
|
|


