இலங்கைக்கான கடன் வழங்குநர்களுடனான நடவடிக்கைகளின் போது அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க தயார் – இந்தியா அறிவிப்பு !

இலங்கைக்கான கடன் வழங்குநர்களுடனான நடவடிக்கைகளின் போது ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜகப் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை சார்பில் நிதி உத்தரவாதத்தை வழங்கிய முதலாவது கடன் வழங்குநராக இந்தியா செயற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், கடல்சார் பாதுகாப்புத் துறையில் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு இரு நாடுகளும் கவனம் செலுத்தும் எனவும் இலங்கைக்கான பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜகப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்கும் இறக்குமதியாளர்கள்!
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜன...
இலங்கை அருகே வளிமண்டலத் தளம்பல் - நாட்டின் பல பாகங்களில் சில தினங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு என...
|
|