கொரோனா எங்கிருந்து எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தக்கூடாது – இலங்கை வலியுறுத்து!
Thursday, September 9th, 2021
கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து ஒரு விரிவான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் பாரபட்சமற்ற ஆய்வை முன்னெடுப்பது மிகவும் முக்கியமானதாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து ஆய்வானது, விஞ்ஞானம் மற்றும் சான்றுகள் சார்ந்த முறைமைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதுடன், அது அரசியல் மயமாக்கப்படலாகாது என்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது.
இது தொடர்பாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குச் சுமுகமான மற்றும் விரிவான தீர்வுகளைக் காண ஒருங்கிணைந்த முயற்சியில் அனைத்து சர்வதேச பங்காளிகளுடனும் இலங்கை தொடர்ந்தும் பணியாற்றும் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி!
இன்றுமுதல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக பரிணாமம் - மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு...
யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் பரப்பப்படும் தவறான கருத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் - ப...
|
|
|


