இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சந்திப்பு!
Wednesday, May 29th, 2024
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் நடத்தப்படவுள்ள தேர்தல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அத்துடன் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் அமெரிக்கத் தூதுவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அரசியலமைப்பினூடாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய எதிர்வரும் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர்கள், ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பலரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்து எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|
|


