இரு வாரங்களில் 1,000 ரூபாய் சம்பளம் குறித்த வர்த்தமானி வெளியாகும் – நாடாளுமன்றில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவிப்பு!
Tuesday, February 9th, 2021
ஆயிரம் ரூபா ஊதியம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்திருந்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் இந்த திட்டம் சட்டமாக மாறும் என்றும் தெரரிவித்துள்ளார்.
இருப்பினும் இறுதி முடிவு எடுக்கப்படும் முன்னர் பெருந்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் கவலை தொடர்பாகவும் அரசாங்கம் கவனத்தில் எடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரன வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் தொழிலாளர்களுக்கான அதிகரித்த ஊதியத்தை தோட்ட உரிமையாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடக் கூடாது - இராணுவத் தளபதி!
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
கொள்கையில் உறுதியாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டத்தரணி தொழிலைக்கூட செய்யக்கூடாது ...
|
|
|


