கொள்கையில் உறுதியாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டத்தரணி தொழிலைக்கூட செய்யக்கூடாது – சி. தவராசா சுட்டிக்காட்டு!

Monday, July 6th, 2020

இலங்கை அரசியலமைப்பின் ஒற்றையாட்சியை பேணிப்பாதுகாப்போம் என வேட்புமனுவில் உறுதியுரை எடுத்துவிட்டு ஒரு நாடு இரு தேசம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போலித் தேசியம் பேசி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா இவர்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்றால் உழைப்பிற்காக சட்டத்தரணி  தொழிலைக்கூட செய்திருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை ஜனநாயக சேசலிச குடியரசின் அரசியல் அமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்று பயபக்தியுடன் சத்தியப்பிரமாணம் செய்தே நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலுக்கான தேர்தலில் சகல வேட்பாளர்களும் வேட்புமனுவில் கையொப்பம் இட்டுள்ளனர். அவ்வாறானால் . ஒரு நாடு இரு தேசம் எனக்கோசம் போடுபவர்கள் எந்த அடிப்படையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டு தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இலங்கை அரசியல் அமைப்பில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு என தெ ளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தேசம் எனக் கோசம் போடும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினினர் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஏற்று அந்த அரசியலமைப்பை பாதுகாப்போம் என சத்தியம் செய்தே தற்போதைய தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.

தங்களது உரைகளில் ஒரு நாடு இரு தேசம் என பேசிபரும்இவர்கள் இலங்கை அரசியல் அமைப்பின் இரண்டாம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒற்றையாட்சி முடியரசை பேணிப்பாதுகாப்போம் என்று கையெப்பமிட்டுவிட்டே மக்களிடம் போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வாக்குகளுக்காக திரிகின்றனர். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை பாதுகாப்போம் என கையெப்பமிட்டுவிட்டு இவர்கள் என்னத்தை செய்வதற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியினின் பல சட்டத்தரணிகள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் களம் இறங்கியுள்ளனர் இவர்கள் சட்டக்கல்லூரிகளில் படித்துவிட்டு சட்டத்தரணி தொழில் ஈடுபடும் போது இதே உறுதிமொழியை அதாவது ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை பேணிப்பாதுகாப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்தே சட்டத்தரணி தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படியானல் உழைப்பதற்கு மட்டும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற உறுதியை அரசியலுக்காக ஒரு நாடு இரு தேசம் என்ற போலிப்பிரச்சாரம் இதுதான் இவர்களின் உண்மை முகம் இவர்கள் உண்மையிலேயே கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்றால் இவர்கள் உழைப்பதற்காகக் கூட ஒற்றையாட்சி அரசிலமைப்பின் மீது சத்தியப்பிரமாணம் செய்திருக்கக்கூடாது.

1983 ஆம் ஆண்டு 6 வது அரசியலமைப்பு திருத்த்தின் பின்னர் இலங்கையில் இருக்கின்ற சகல அரசாங்க உத்தியோகத்தர்கள் சட்டத்தரணிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இலங்கை அரசியல் அமைப்பை பேணிப்பாதுகாப்போம் என உறுதியுரை செய்ய வேண்டும் என திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதன்போது அமிர்தலிங்கம்போன்றோர் அரசியலமைப்பின் உறுதியுரை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையைும் இராஜினாமாச் செய்திருந்தார்.

ஆனால் குமார் பொன்னம்பலம் தாம் சட்டத்தரணியாக கடமையாற்றுவதற்கு இலங்கையில் உறுதியுரை எடுத்தால் மக்களுக்கு தெரிந்துவிடும் என்று திருட்டுத்தனமாக மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கை அரசியல் அமைப்பை பேணிப் பாதுகாப்பேன் என்று உறுதியுரை எடுத்திருந்தார் என்பதை மக்கள் இன்றும் நினைவில் வைத்திருப்பார்கள் என்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: