இரு நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Thursday, June 23rd, 2022
இன்று காலை நாட்டை வந்தடையவிருந்த 40,000 மெட்ரிக் டன் ஒக்டென் 92 ரக பெற்றோலுடனான எரிபொருள் தாங்கி கப்பல், நாளையதினமே நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே, நாடளாவிய ரீதியில் இன்று மற்றும் நாளையதினங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போதியளவு ஒட்டோ டீசல் கையிருப்பில் உள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் முழுமையாக டீசல் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், சுப்பர் டீசல் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
11 இந்திய மீனவர்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைது!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தடைந்தார்!
22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்!
|
|
|


