இரு நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

இன்று காலை நாட்டை வந்தடையவிருந்த 40,000 மெட்ரிக் டன் ஒக்டென் 92 ரக பெற்றோலுடனான எரிபொருள் தாங்கி கப்பல், நாளையதினமே நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே, நாடளாவிய ரீதியில் இன்று மற்றும் நாளையதினங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போதியளவு ஒட்டோ டீசல் கையிருப்பில் உள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் முழுமையாக டீசல் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், சுப்பர் டீசல் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையின் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா!
வெண்ணிலா கூட தேய்ந்து தேய்ந்து தான் வளர்கின்றது – ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன்!
டிசம்பர் 2 ஆம் திகதி சாதாரண தர பரீட்சை ஆரம்பம்!
|
|