இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை – நடைமுறைச் சிக்கல்களால்முடியாத காரியம் என தேர்தல் ஆணையம் தெரிவிப்பு!
Saturday, April 13th, 2024ஜனாதிபதி தேர்தல் (Presidential election) மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் (Parliament election) இரண்டையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நடைமுறைச் சிக்கல்களால் அது முடியாத காரியம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் தனித்தனி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டும்.
எனினும், ஜனாதிபதித் தேர்தலின் போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வாக்குச் சீட்டு அச்சிடப்பட வேண்டும்
இந்த இரண்டு தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் வெவ்வேறு விதமாக கூட்டணி அமைக்கின்றன.
இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் அரசியல் கூட்டணி பொதுத் தேர்தலில் பிரிந்து விடும் வாய்ப்புள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொரோனா தொற்று: இரண்டாயிரத்து 463 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!
அமைச்சர்களின் சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானம்!
யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர்கள் - தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்ப...
|
|
|


