இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எகிப்து விஜயம்!

Friday, August 9th, 2024

எகிப்திய வெளிவிவகார அமைச்சர் படர் அபிடிலாட்டியின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

எகிப்திய வெளிவிகார அமைச்சர் மற்றும் முதலீட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஆகியோரை அமைச்சர் அலி சப்ரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் சப்ரி, நாளையதினம் வரையில் எகிப்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த விஜயம் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது

000

Related posts: