இராணுவ தளபதி – சீன பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு!
Thursday, September 12th, 2019
இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் க்ஷூ ஜியன்வெலுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
எந்த கஷ்டமான நேரத்திலும் சீனா இலங்கையுடன் இணைந்திருக்கும் என சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இராணுவ தளபதியிடம் கூறியுள்ளார்.
அதேவேளை சீனாவுடனான தொடர்புகளை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வேண்டும் என சவேந்திர சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பின் இறுதியில் இருவரும் நினைவு பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளதாக இராணுவத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
Related posts:
முதன்முறையாக விண்ணில் பாயும் இலங்கையின் ராவணா விண்கலம்!
ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு 286 பில்லியன் ரூபா செலவு - அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்ப...
|
|
|
‘அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டில் வளரும் மரம்’ எனும் தொனிப்பொருளில் கடற்றொழில் நீரியல் வளமூல அமைச்...
அனைத்து அரச ஊழியர்களையும் இன்றுமுதல் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை - பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு...
தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்கு பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்து வாகனங்களை ...


