இராணுவ உபகரணங்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யும் முயற்சியில் இலங்கை – மொஸ்கோவிற்கான இலங்கை தூதுவர் தகவல்!
Friday, September 11th, 2020
ரஸ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக மொஸ்கோவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான பட்டியலொன்றையும் சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் நாங்கள் எங்களுக்கு தேவையான ஆயுததளபாடங்கள் குறித்த பட்டியலொன்றை வைத்துள்ளளோம் அவற்றை குறுகிய காலத்துக்குள் பெற விரும்புகின்றோம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய உடன்படிக்கையொன்று தற்போதும் நடைமுறையில் உள்ளது அது முடிவடைந்ததும் ரஸ்யாவுடன் புதிய உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவோம் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னெடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சமாதானப் பணிகளுக்கு சாதனங்கள் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரிசி இறக்குமதி தீர்மானத்திற்கு விவசாயிகள் அதிருப்தி!
உயர்தரத்துக்குத் தெரிவானோர் சிறந்த பாடங்களையே தெரிவு செய்யவேண்டும் - உடற்கல்வி சங்கத் தலைவர் !
யுத்தத்தில் இறந்த அனைவரும் ஒரே இடத்தில் நினைவு கூரப்பட வேண்டும் – சுயேட்சைக்குழுவின் முன்மொழிவை தூக்...
|
|
|


