அரிசி இறக்குமதி தீர்மானத்திற்கு விவசாயிகள் அதிருப்தி!

Thursday, December 15th, 2016

கொள்வனவு செய்த நெல், களஞ்சியசாலைகளில் காணப்படும் நிலையில், அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்ய எடுத்துள்ள தீர்மானத்திற்கு விவசாயிகளும் உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்களும் அதிருப்பதி வெளியிட்டுள்ளனர்.

சந்தையில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் சில்லறை விலை 90 ரூபாவாகக் காணப்படுவதுடன், ஒரு கிலோ கிராம் நாட்டரிசியின் விலை 84 ரூபாவில் இருந்து 86 ரூபாவாகக் காணப்படுகின்றது. எவ்வாறாயினும், ஒரு கிலோ கிராம் வௌ்ளையரிசியின் விலை 80 முதல் 83 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், சம்பா அரிசி 112 ரூபா முதல் 145 ரூபாவாகக் காணப்படுகின்றது.

அரிசியின் விலை அதிகரித்துள்ள போதிலும், உத்தரவாத விலையில் கடந்த போகத்தின் போது கொள்வனவு செய்யப்பட்ட நெல் அரசாங்க களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் தொகை இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன்களாகும். கடந்த போகத்தின் போது நெல் உற்பத்தியில் பற்றாக்குறை காணப்பட்டமையினால், நெல் விற்பனை சபையிடம் இருப்பில் காணப்பட்ட இந்த தொகையை வெளியிடுவதனைத் தடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் மீண்டும் தயாராகின்றது. 2014, 2015 ஆம் ஆண்டுகளில் லக் சதொச ஊடாக இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்த போது, அரசாங்கம் 8 பில்லியன் ரூபா நட்டமடைந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

4504110111532_4504110111532811033

Related posts:


பலஸ்தீனுடனான நட்புறவுக் கொள்கையில் எந்தவகையிலும் மாற்றமேற்படாது - வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி...
அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன் - முடியாவிட்டால் விலகி செல்வேன் - பிரதமர் ...
எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படக் கூடாது - அரச நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவ...