இராணுவம் மற்றும் விமானப் படையின் கூட்டுப்படைத் தளபதிகள் நியமனம்!
Thursday, October 27th, 2016
இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உபய மெதவெல நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் கூட்டுப்படைகளின் பிரதி தளபதியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்கநியமிக்கப்பட்டுள்ளார் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதனிடையே இலங்கை விமானப்படையின் கூட்டுப் படைத் தளபதியாக எயார்வைஸ் மார்ஷல்.டி.எல்.எஸ்.டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கடந்த வெள்ளிக்கிழமை(21) வழங்கப்பட்டுள்ள இந்த புதிய நியமனங்கள், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்குவரவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts:
பரீட்சை முடிவுகள் விரைவில் வெளிவரும் - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் உணவுகள் மற்றும் மருந்துகளை வைத்தியரின் பரிந்துரையின்றி பயன்படுத்த ...
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவு – தற்காலிக நெருக்கடி நிலையை இலங்கை விரைவில் வ...
|
|
|


