இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அழைப்பு – 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை!
Tuesday, October 12th, 2021
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவன 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (12) இலங்கை வரவுள்ளார்.
பாதுகாப்பு படைகளின் தளபதி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பினை ஏற்று அவர் இலங்கைக்கு வருகின்றார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாதுபாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதி ஆகியோரை இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, இந்திய இராணுவத் தளபதி இந்திய – இலங்கை மித்ரசக்தி இராணுவ பயிற்சியின் இறுதி பயிற்சியையும் கண்காணிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பணிப்புறக்கணிப்பிலிருந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் விலகல்!
குழந்தைகள் மருத்துவமனைக்கு இலவசமாக முட்டை!
துருக்கியில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி தெரிவிப்பு!
|
|
|


